சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயில் அறங்காவலர்கள் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை எனக்கூறி, தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, தேவஸ்தான உறுப்பினர் ஜெய ராஜகோபால் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு நேற்று (ஜூன் 22) விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் முறையாக நடந்துள்ளதால், அதனை ரத்து செய்யும்படி கோர முடியாது என கோயில் அறங்காவலர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஏற்னகவே தேர்தல் முடிந்து, அறங்காவலர்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில், தேர்தலை ரத்து செய்ய முடியாது எனவும், அறநிலையத்துறை சட்டப்படி, அறங்காவலர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டுமானால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தான் முறையிட வேண்டும் என்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:"தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது"- சென்னை உயர் நீதிமன்றம்!