தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுதந்திர தின பாஜக பைக் பேரணி; காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு! - bjp bike rally - BJP BIKE RALLY

Madras High Court: சுதந்திர தினத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இருசக்கர வாகனப் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 13, 2024, 9:17 PM IST

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேசியக்கொடியுடன் இருசக்கர வாகனத்தில் பேரணி நடத்த அனுமதிக்கக் கோரி, கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி அளித்த மனுவை காவல் துறை நிராகரித்துள்ளதாகக் கூறி, பாஜக கோவை மாவட்டச் செயலாளர் கிருஷ்ண பிரசாத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பால் கனகராஜ், குறுகலான சாலை மற்றும் மேம்பால கட்டுமானப் பணி ஆகியவற்றை காரணமாகக் கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, யார் வேண்டுமானலும் தேசியக்கொடியை ஏந்திச் செல்லலாம் எனவும், வேண்டுமானால் எந்தெந்த இடங்களில் பேரணி செல்கிறார்கள் என்பது தொடர்பான விவரங்களை காவல்துறை அறிந்து, வாகன நெரிசல் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். ஆனால், முழுவதுமாக பேரணிக்கு அனுமதி மறுக்க முடியாது என தெரிவித்தார். மேலும், வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:கன்னியாகுமரியில் ஜீரோ பாயிண்ட் பகுதியில் தேசியக்கொடியை பறக்கவிட கோரிய வழக்கு; அரசு தரப்பில் அறிக்கை தாக்கல்! - Kanyakumari Zero Point Flag

ABOUT THE AUTHOR

...view details