தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விதிமீறி கட்டியுள்ள பள்ளி, கோயில் கட்டடங்களுக்கு இரக்கம் காட்ட முடியாது.. நீதிபதி அதிரடி! - ILLEGALLY CONSTRUCTED BUILDING

விதிமீறி கட்டடங்கள் கட்டியுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோயில்கள் மீது இரக்கம் காட்ட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 24 hours ago

சென்னை: கொளத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி, தரைதளம் மற்றும் முதல் தளத்துக்கு மட்டும் அனுமதி பெற்ற நிலையில், அனுமதியில்லாமல் தரைதளத்துடன் மூன்று தளங்களை கட்டியுள்ளது. இந்த விதிமீறல் தொடர்பாக, பள்ளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, பள்ளி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி நிர்வாகம் தரப்பில், “பள்ளியில் 1,500 மாணவர்கள் படித்து வருவதால் கருணை காட்ட வேண்டும். அதுமட்டுமின்றி சென்னை தியாகராய நகரில் ஏராளமான விதிமீறல் கட்டடங்கள் உள்ளது” என வாதிடப்பட்டுள்ளது.

அப்போது, “தியாகராய நகரில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இது, அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோயில்கள் ஆகிய இடங்களில் விதிமீறல் செய்தால், அது விதிமீறல் தான். எனவே, இவற்றுக்கு இரக்கம் காட்ட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

இதையும் படிங்க:"தமிழக பள்ளிகளில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும்" - அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!

அதனைத் தொடர்ந்து, 2024-25ஆம் கல்வியாண்டு முடிவடையும், ஏப்ரல் வரை பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த அளவுக்கு மட்டுமே இரக்கம் காட்ட முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details