சென்னை:தமிழகத்தில்,18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக சார்பில் "இந்தியாவைக் காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்" என்ற விளம்பரங்களுக்கு முன் அனுமதி பெறுவது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துடன் கடிதம் அனுப்பப்பட்டது.
திமுகவின் தேர்தல் விளம்பரம், விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறி ஏப்ரல் 4 ம் தேதி அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மார்ச் 2023 புதிய விதிமுறைகளின் படி மாநில சரிபார்ப்பு குழு அனுமதி வழங்க வேண்டும்.
அனுமதி மறுக்கப்படுவதாக இருந்தால், அந்த விளம்பரங்கள் இரு தரப்பினரிடையே மோதலை ஏற்படுத்துவது, சமூகம் தொடர்பானதாக இருந்தால் அனுமதி மறுக்கலாம். ஆனால், தேர்தல் ஆணையர் உரிய விளக்கம் அளிக்காமல் அனுமதி மறுத்துள்ளது. அதனால், தேர்தல் ஆணையத்தின் அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து விளம்பரத்தை வெளியிட அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.