தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அரசியல் தலைவர்கள் பற்றி பேசக் கூடாது" - ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமீன்! - MADRAS HIGH COURT

அரசியல் கட்சித் தலைவர்கள் பற்றி பேசக் கூடாது, மடாதிபதிகள் பற்றி பேசக் கூடாது உள்ளிட்ட நிபந்தனையுடன் ரங்கராஜன் நரசிம்மனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 24 hours ago

சென்னை:முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரங்கராஜன் நரசிம்மனுக்கு, அரசியல் தலைவர்கள் பற்றி பேசக் கூடாது, மடாதிபதிகள் பற்றி பேசக் கூடாது உள்ளிட்ட நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஜீயரை அவதூறாக விமர்சித்ததாக திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மனை சென்னை சைபர் கிரைம் போலீசார், டிசம்பர் 15ஆம் தேதி கைது செய்தனர். பின்னர், பெண் வழக்கறிஞர் குறித்து அவதூறாக விமர்சித்ததாக, திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

தற்போது, சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை, சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாகக் கூறி, அவரது மகன் முகுந்தன் ரங்கராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சட்ட விதிகளை பின்பற்றாமல் தனது தந்தை கைது செய்யப்பட்டுள்ளதால், அவரது கைதை சட்டவிரோதமானது என அறிவித்து, அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. அதேபோல, பெண் வழக்கறிஞரை விமர்சித்த வழக்கிலும் ஜாமீனில் விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று (டிச.24) இந்த இரு மனுக்களின் மீதான விசாரணை நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு நடைபெற்றது. அப்போது, மனுதாரர் தரப்பில், கைதுக்கு முன் முறையான நோட்டீஸ் கொடுக்கவில்லை என்றும், கைது நடவடிக்கையின் போது உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி உரிய விதிமுறைகள் பின்பற்றவில்லை என வாதிட்டார்.

மேலும், மற்ற வழக்குகளிலும் கைது செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அதுமட்டுமின்றி, ரங்கராஜன் நரசிம்மன் சிறையில் சாப்பிடவில்லை எனவும், வீட்டுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் எனவும் வாதிட்டார்.

இதையும் படிங்க:மாணவி சத்யா கொலை வழக்கில் டிசம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு!

அதனைத் தொடர்ந்து, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், உரிய சட்ட விதிகளை பின்பற்றித்தான் கைது நடவடிக்கை மேற்கொண்டதாகவும், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும், அதனால் ஜாமீனில் விடுவிக்கக் கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்தார். உரிய மனு அளித்தால் வீட்டுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்படும் எனவும் வாதிட்ட அவர், ரங்கராஜன் நரசிம்மன் அவதூறாகப் பேசிய வீடியோ காட்சிகளையும் நீதிபதி முன்பு சமர்ப்பித்தார்.

அதையடுத்து, ரங்கராஜன் நரசிம்மன் பேசிய வீடியோக்களை நீதிபதி பார்வையிட்டார். பின்னர், இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ரங்கராஜன் நரசிம்மனை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். ஆனால், அரசியல் கட்சி தலைவர்கள் பற்றி பேசக் கூடாது, மடாதிபதிகள் பற்றி பேசக் கூடாது, சாட்சிகளை மிரட்டக் கூடாது. தொடர்பு கொள்ளக் கூடாது என்று நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details