ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“திமுக ஓட்டுலதான ஜெயிச்ச” - காங்கிரஸ் எம்எல்ஏவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சேர்மன்.. மயிலாடுதுறையில் நடந்தது என்ன? - Congress MLA Rajkumar

மயிலாடுதுறையில் உள்ள மகளிர் கலைக்கல்லூரி கட்டிட அடிக்கல் நாட்டு விழாவிற்கு திமுக நகராட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்காததால் ஆத்திரமடைந்த அவர், எம்எல்ஏவிடம் சரமாரியாக கேள்வி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 5:22 PM IST

காங்கிரஸ் எம்எல்ஏவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சேர்மன்

மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் தருமபுரம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரிக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலம், கல்லூரியின் பின்பகுதியில் உள்ளது. இங்கு கல்லூரிக்குத் தேவையான நூலக கட்டிடம் 4.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு அடுக்கு தளம் உடன் கட்ட திட்டமிடப்பட்ட நிலையில், அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (மார்ச் 6) நடைபெற்றது. இவ்விழாவில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இவ்விழாவிற்கு மயிலாடுதுறை திமுக நகராட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்னர், அங்கு டூவீலரில் வந்து இறங்கிய திமுக நகரச் செயலாளரும், நகராட்சித் தலைவருமான குண்டாமணி செல்வராஜ், நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்காமல், அடிக்கல் நாட்டியதைக் கண்டித்து, கட்டிட ஒப்பந்தக்காரர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தார்.

அங்கு இருந்த இன்ஜினியரிடம் “இந்த இடத்திற்கு வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன், எப்படி கட்டிடம் கட்டிகிறீர்கள் என்பதை பார்க்கின்றேன். எம்பிகிட்ட சொன்னீர்களா?, எம்பி என்ன செத்தா போயிட்டாரு? சேர்மன் கிட்ட சொன்னீர்களா?, என்ன அர்த்தத்தில் செய்கிறீர்கள்? யார கேட்டு செய்றீங்க?, தப்பா பண்றீங்க. எம்பி என்ன செத்தா போயிட்டாரு, தேதி அறிவிச்சுட்டாங்களா? இதையெல்லாம் கேட்டா நான் பொல்லாதவனா? எந்த அடிப்படையில் செய்றீங்க?, நீங்க தப்பா பண்றீங்க.

நகராட்சியில் பாதி இடம்தான் தீர்மானம் வச்சிருக்கு. பாதி இடத்திற்கு தீர்மானம் இல்லை. வேற மாதிரி செஞ்சிடுவேன். யார்கிட்டயும் சொல்றது இல்லையா?, திருட்டுத்தனமா பண்றீங்களா? தலைவர் அறிவித்த திட்டம்தானே, முதலமைச்சர் தானே நிதி கொடுக்கிறார். நாலு பேரு கிட்ட சொல்றதுனால உனக்கு என்ன சங்கடம்?, நீ ஒப்பந்தக்காரர் தானே. அதற்கு நகர மன்றத் தலைவர் ப்ரோட்டகால் முறையில் பண்ணிட்டீங்களா? எல்லாம் எம்எல்ஏவுடன் முடிஞ்சிடுச்சா? எம்.எல்.ஏ சொல்ல மாட்டாருங்க. எம்எல்ஏ இன்னைக்கு இருந்துட்டு போயிடுவாருங்க.

எம்எல்ஏ காங்கிரஸ் ஓட்டுலயா ஜெயிச்சாரு, திமுக ஓட்டு வாங்கிதானே ஜெயிச்சாரு. எம்எல்ஏவுக்கு என்ன? திமுககாரன் யாருமே கிடையாது. திமுககாரன் எல்லாம் அடிச்சிட்டு நிக்கணும்” என்று ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பினார். இதையடுத்து அங்கிருந்து விலகிச் சென்று காரில் அமர்ந்த எம்எல்ஏ ராஜகுமார், காரில் அமர்ந்தபடி நகராட்சி தலைவரை சமரசப்படுத்த முயன்றார். இதனால், கோபமடைந்த நகராட்சி தலைவர் குண்டாமணி செல்வராஜ், காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமாரிடம் சென்று, இன்னும் நிறைய பேசுவேன்.

நீ வந்தது தப்பு. நீ எம்எல்ஏ தானே. நீ வந்தது தப்பு. எப்படி வந்த நான் ஒரு சேர்மன் இருக்கேனே. உன்னை ஜெயிக்க வைத்தது யார்? உன்ன நான் தான் ஜெயிக்க வச்சேன். வயிற்றெரிச்சல்ல இருக்கேன் உன் காரையே உள்ள விடமாட்டேன்.ஏன் ரத்தம் எல்லாம் கொதிக்குது. உன் எண்ணத்தில் இடி உழுவோ. திமுக காரங்களா அடிச்சிட்டு நிக்கணும். நீ மட்டும் காரில் சொகுசாக போக வேண்டுமா?, சண்டை போட்டு டிவில வரணும் அதை பாக்கணும்.

இது தலைவர் நிகழ்ச்சி தானே எல்லார்கிட்டயும் சொல்லிட்டு செஞ்சா என்ன? எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வர உள்ள நிலையில், தமிழகத்தில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. இந்த சூழலில் காங்கிரஸ் எம்.எல்.ஏவும், திமுக நகராட்சித் தலைவருக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:நாடளுமன்றத் தேர்தல் 2024; அதிமுக கூட்டணியில் இணைந்தது அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி!

ABOUT THE AUTHOR

...view details