விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியை சேர்ந்த பி.கிருஷ்ணகுமார், படந்தல் பகுதியை சேர்ந்த எம். கருத்தப்பாண்டி, கே.ராஜபாண்டி, எஸ். புஷ்பவல்லி, உள்ளிட்ட 7 பேர் தாக்கல் செய்த மனுவில், “ஏழாயிரம் பண்ணையில் சந்தனமாரி என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் ஃபயர் வொர்க்ஸ் இன்டஸ்ட்ரியலில் கடந்த 12.02.2021ஆம் தேதியில் இந்த பயர் ஓர்க்ஸில் வேலை செய்து கொண்டிருக்கும் போது சுமார் ஒரு மணி நேரம் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் 25 நபர்கள் பலியாகி விட்டனர். மேலும் இந்த ஆலை விபத்தில் எங்களது உறவினர்களும் பலியாகி விட்டனர். இந்த பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பந்தமாக ஏழாயிரம் பண்ணை காவல் நிலையத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வெடி விபத்து சம்பந்தமாக டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து கடந்த 2021ஆம் ஆண்டு வழக்காக எடுத்துக்கொண்டது. வழக்கின் இறுதியில் பலியான நபர்களின் வாரிசுகளுக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடாக தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது .
தமிழக அரசு இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அந்த மேல் முறையீட்டு வழக்கில் இழப்பீடு தொகையை உறுதி செய்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு தற்போது வரை பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை மதித்து நடக்காமல் எங்களுக்கு இழப்பீடு கொடுக்காமல் தற்போது வரை உத்தரவை நிறைவேற்ற வில்லை.