மதுரை:தஞ்சாவூரைச் சேர்ந்த சுவாமிமலை சுந்தர விமலநாதன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் "மத்திய அரசின் பிஎம்-கிசான் திட்டம் நாட்டிலுள்ள அனைத்து நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு வருமான ஆதரவை வழங்கும் நோக்கில், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் திட்டமான "பிரதான மந்திரி கிசான் சம்மான்" திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டம் விவசாய நிலத்தின் உரிமையாளர்களாக இருந்து விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளின் குடும்பங்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் நல்ல விளைச்சலை உறுதி செய்வதற்காக பல்வேறு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மேலும் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் அவர்கள் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.6000 வரவு வைக்கப்படுகிறது. விதிகளுக்கு உட்பட்டு தகுதி உள்ள நபர்களுக்கு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக ஆன்லைனில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பணம் வரவு வைக்கப்படுகிறது.