மதுரை:தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கன்னி சேர்வைபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த தவ ஈஸ்வரன் (28). இவர் சின்னமனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலைக் குற்றம் புரிந்ததாக மதுரை மத்திய சிறைச் சாலையில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இங்கு ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தவ ஈஸ்வரன் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) சிறை வளாகத்திற்கு உள்ளேயே தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனைப் பார்த்த சிறைக் காவலர்கள், ஆபத்தான முறையில் இருந்த தவ ஈஸ்வரனை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.