தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீர வசந்தராயர் மண்டபம் புனரமைப்பு பணி எப்போது முடியும்? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு!

Veera Vasantharayar Mandapam: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தில் சேதம் அடைந்த வீர வசந்தராயர் மண்டபம் புனரமைப்பு பணி எப்பொழுது முடியும் என அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

வீர வசந்தராயர் மண்டபம் புனரமைப்பு பணி
வீர வசந்தராயர் மண்டபம் புனரமைப்பு பணி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 4:14 PM IST

மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், கடந்த 2018ஆம் ஆண்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் வீர வசந்தராயர் மண்டபம் முற்றிலும் சேதம் அடைந்தது. தீ விபத்தில் சேதம் அடைந்த வீர வசந்தராயர் மண்டபம் மிகவும் பழமை வாய்ந்த பல்வேறு வரலாற்று கலை சிற்பங்கள் கொண்ட மண்டபம் எனவும், எனவே இந்த மண்டபத்தை உடனடியாக சீரமைத்து, அதேபோல் புனரமைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு மனுக்கள் 2018ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, “நீதிபதிகள் தீ விபத்து நடந்து ஐந்து வருடம் முடிந்து விட்டது. வீர வசந்தராயர் மண்டபத்தை புனரமைக்கும் பணியின் தற்போதைய நிலை என்ன?” என கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து அரசுத் தரப்பில் வழக்கறிஞர் அம்ஜத் கான் ஆஜராகி, புனரமைப்பு பணி தெடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மண்டபத்திற்கு பழைய கற்கள் போலவே புதிய தூண்கள் வைப்பதற்காக நாமக்கல் மாவட்டம் குவாரிகளில் இருந்து கற்கள் மதுரை செங்குளம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, வேலைப்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், இன்னும் எவ்வளவு நாட்களில் இந்த பணிகள் முடியும் என்பது குறித்து அரசுத் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:பட்ஜெட்டை அலங்கரிக்கும் நிர்மலா சீதாராமனின் சேலைகள்.. பிரதிபலிப்பும் பின்னணியும் என்ன?

ABOUT THE AUTHOR

...view details