தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் பேருந்துகளை பழைய வகையைக் குறிப்பிட்டு இயக்க கோரிய வழக்கு; போக்குவரத்து துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு! - TNSTC bus types - TNSTC BUS TYPES

Govt Buses: தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பேருந்துகளின் வகையைக் குறிப்பிட்டு இயக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், போக்குவரத்து துறையின் ஆணையர் பதில் மனுத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 9:50 PM IST

மதுரை: திருச்சி மணச்சநல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் பேருந்துகள், அவற்றின் வசதிகளுக்கு ஏற்ப Non- Deluxe, Semi Deluxe, Deluxe, A.C. Deluxe என வகைப்படுத்தப்படுகின்றன.

இதன் அடிப்படையில் இருக்கை, காற்றோட்டம், குளிர்சாதனம் உள்ளிட்ட வசதிகள் இருக்கும். அதன் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகின்றன. தற்போது பேருந்துகளின் வகையைக் குறிப்பிடாமல் 1 to1, 1 to 3, 1 to 5 என்பது போல பேருந்துகளில் தகவல் பலகை வைக்கப்படுகிறது.

இது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே, 1 to1, 1 to 3, 1 to 5 என்று இல்லாமல் பேருந்துகளின் வகையைக் குறிப்பிட்டு பேருந்துகள் இயக்கப்படுவதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு, வழக்கு தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து துறையின் ஆணையர், போக்குவரத்துத் துறையின் நிர்வாக இயக்குனர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:நெல்லை பல்கலை பேராசிரியர்களிடம் கத்தி முனையில் கொல்லை.. கொலை செய்ய திட்டமா? - Professors Robbed In Tirunelveli

ABOUT THE AUTHOR

...view details