மதுரை:மதுரையை சேர்ந்த சித்த மருத்துவர் ஜெயவெங்கடேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், தூத்துக்குடி, தஞ்சாவூர், கும்பகோணம், கன்னியாகுமரி, கரூர் மற்றும் சிவகாசி ஆகிய புதிதாக தொடங்கப்பட்டுள்ள 6 மாநகராட்சி பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவ சேவையை தொடங்கி நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், சித்த மருத்துவ சேவை வழங்க வேண்டும்.
ஆயுர்வேத, யுனானி, சித்தா போன்ற இந்திய மருத்துவ முறையை மத்திய , மாநில அரசுகள் ஊக்குவித்து வரும் நிலையில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை சித்த மருத்துவ பிரிவு இல்லாததால் மக்கள் சித்த மருத்துவ சேவையை பெற முடியாமல் அலோபதி மருத்துவ முறை மட்டுமே பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். தமிழகத்தில் ஏழு மாநகராட்சிகளில் உள்ள நகர்ப்புற மருத்துவமனைகளில் சித்த மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.