சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்காக அழைத்து வரப்பட்ட காட்சிகள் (credits -ETV Bharat Tamil Nadu) மதுரை: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கடந்த மே 4ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சவுக்கு சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில், சவுக்கு சங்கர் கடந்த மே 7ஆம் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கரை 7 காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோரி தேனி மாவட்ட PC பட்டி காவல்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமலச்செல்வன் முன் இன்று மதியம் விசாரணைக்கு வந்தது.
அப்போது சவுக்கு சங்கருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய நீதிபதி செங்கமல செல்வன் உத்தரவிட்டார். உத்தரவைத் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார். பின்னர் மீண்டும் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் 3.00 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி செங்கமல செல்வன் உத்தரவிட்டார். காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்த நிலையில் பெண் போலீசாரின் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையும் படிங்க:நெல்லையில் சிறுவனை தாக்கிய குரங்கு.. அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க சிறப்பு படை அமைப்பு! - Monkey Attack In Tirunelveli