தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஷால் Vs லைகா; ஜூன் 28 முதல் இறுதி விசாரணை! - Vishal Vs Lyca - VISHAL VS LYCA

Vishal Vs Lyca: நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இறுதி விசாரணை ஜூன் 28ஆம் தேதி தொடங்கும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Vishal
விஷால் மற்றும் லைகா (Credits - Vishal and Lyca 'X' Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 12, 2024, 7:38 PM IST

சென்னை: 'விஷால் பிலிம் பேக்டரி' படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாங்கிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகையை திருப்பிச் செலுத்தாத நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2021ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

பின்னர், இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை வழக்கு கணக்கில் டெபாசிட் செய்யவும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யவும் நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, விஷால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, லைகாவிற்கும், விஷாலுக்கும் இடையே உள்ள பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு சமரச அதிகாரியை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த லைகா நிறுவனம் தரப்பு வழக்கறிஞர் ஹேமா ஸ்ரீனிவாசன், சமரசத்திற்கு தயார் என விஷால் தரப்பு கூறினாலும், ஆக்கப்பூர்வமாக எதையும் முன்னெடுக்கவில்லை என தெரிவித்தார்.

இதனையடுத்து, இறுதி விசாரணைக்காக வழக்கை ஜூன் 28ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதனிடையே, ரத்னம் படத்திற்காக விஷாலுக்கு வழங்க வேண்டிய நிலுவைச் சம்பளமான இரண்டு கோடியே 60 லட்சம் ரூபாயை படத் தயாரிப்பு நிறுவனமான STONE BENCH FILMS செலுத்தியதை அடுத்து, அந்நிறுவனத்தை வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவின் நெகிழ்ச்சி தருணங்கள்.. ஆனந்தக் கண்ணீர் முதல் ஆர்ப்பரிப்பு வரை!

ABOUT THE AUTHOR

...view details