சென்னை:தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சட்டவிரோதமாக கொடிக் கம்பங்களை நட்டுள்ளதாகக் கூறி வழக்கறிஞர் ராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், தேசிய நெடுஞ்சாலைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து அரசியல் கட்சிகள், தங்கள் அரசியல் மேடையாகப் பயன்படுத்தி கொடிக் கம்பங்களை நடுவதால், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ்களின் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும் மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில், 45 இடங்களில் 89 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் 40 இடங்களில் அகற்றப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.