தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீமான் அளித்த புகார்; நடிகை விஜயலட்சுமி நீதிமன்றத்தில் ஆஜராக மேலும் ஒரு அவகாசம்!

Actress Vijayalakshmi appear in Court: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில், நடிகை விஜயலட்சுமி ஆஜராகாததால், ஏப்ரல் 2ஆம் தேதி ஆஜராக மேலும் ஒரு அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

mhc-orders-actress-vijayalakshmi-to-appear-in-person-in-case-of-ntk-leader-seeman
சீமான் அளித்த புகார்; நடிகை விஜயலட்சுமி நீதிமன்றத்தில் ஆஜராக கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 19, 2024, 4:52 PM IST

சென்னை:திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், கடந்த 2011ஆம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நடிகை விஜயலட்சுமியை இன்று (மார்ச் 19) ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில், ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பெங்களூருவில் வசித்து வரும் நடிகை விஜயலட்சுமிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அதற்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராக விரும்பாவிட்டால் இந்த மனுவை ஏன் நிலுவையில் வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, விஜயலட்சுமி ஆஜராக மேலும் ஒரு அவகாசம் வழங்குவதாகக் கூறி, விசாரணையை ஏப்ரல் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் நேரில் ஆஜராக முடியாவிட்டால் காணொலி காட்சி மூலமாக ஆஜராகலாம் எனவும் அனுமதியளித்தார்.

இதையும் படிங்க:குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடை கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details