சென்னை: மத்திய அரசு விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் மருந்து விற்பனை செய்யக்கூடாது என நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பெங்களூரைச் சேர்ந்த மருந்துகள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இது தொடர்பான வழக்கில், “உரிமம் பெற்றவர்களால் மட்டுமே மருந்து விற்பனை செய்யப்படுகிறது. தவறு செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளாக மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை” என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்த மேலும் நான்கு மாதங்கள் ஆகும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் மத்திய அரசு தெரிவித்திருப்பதால், கொள்கை வகுக்க அவகாசம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.