சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் உள்ள பால்வார்த்து வென்றான் கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்பவருக்கு கருணை அடிப்படையில் எட்டு வாரத்தில் சத்துணவு அமைப்பாளராக நியமித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தனக்கு பணி வழங்காததாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோமதி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறினார்.