சென்னை: கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்யக் கோரிய வழக்கில் குற்றவாளி சதீஷை காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு, சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யபிரியா என்பவரை சதீஷ் என்ற இளைஞர் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ்-க்கு தூக்குத் தண்டனை விதித்து கடந்த டிசம்பர் 30ம் தேதி அல்லிகுளம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை உறுதி செய்வதற்காக, வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.