தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆருத்ரா கோல்டு இயக்குனர் ரூசோவின் ஜாமீன் மனு தள்ளுபடி! - Aarudhra Gold case - AARUDHRA GOLD CASE

Aarudhra Gold: ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான ரூசோவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 4:46 PM IST

சென்னை: சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் தங்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தது.

இதனிடையே, இந்த திட்டத்தின் மூலம் மக்களிடம் ஆசையைத் தூண்டி, பண மோசடியில் அந்நிறுவனம் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில், தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் நிறுவனம், சுமார் 1 லட்சத்து 9,255 பேரிடம் 2,438 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக, அந்நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான ரூசோ உட்பட 10க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

மேலும், தலைமறைவாக இருந்த ரூசோ பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீசார் ஏற்கனவே 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கி இருந்தனர்.

இந்நிலையில், ரூசோ தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் மனுவை திரும்பப் பெறுவதாக ரூசோ தரப்பில் தெரிவித்ததையடுத்து அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; பல்வேறு இடங்களில் குளறுபடி.. பாமகவினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! - VIKRAVANDI BY ELECTION

ABOUT THE AUTHOR

...view details