தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நித்யானந்தா தக்கார் நியமன வழக்கு; “சன்னியாசி, சன்னியாசியாக இருக்க வேண்டும்” - நீதிமன்றம் கருத்து.. - Nithyanandha temple thakkar case

Nithyanandha temple thakkar case: நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அரசு தக்கார் நியமனத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் நித்யானந்தா காணொளி காட்சி மூலம் ஆஜராக முடியாது என கூறியதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நித்யானந்தா, சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப் படம்
நித்யானந்தா, சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2024, 4:23 PM IST

சென்னை:நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள வேதாரண்யம் ஸ்ரீ போ.கா.சாதுக்கள் மடம், ஸ்ரீ அருணாசல ஞானதேசிக சுவாமிகள் மடம், ஸ்ரீ பால்சாமி, சங்கரசாமி மடம், ஸ்ரீ சோமநாத சுவாமி கோவில் மடம் ஆகிய 4 மடங்களின் மடாதிபதியாக நித்யானந்தாவை நியமித்து, மடாதிபதி ஆத்மானந்தா அறிவித்தார்.

இது சம்பந்தமாக நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், பக்தர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், 4 மடங்களையும் நிர்வகிக்க, தக்கார் நியமித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, நித்யானந்தா சார்பில் அதிகாரம் பெற்ற நித்யா, கோபிகா, ஆனந்த் மற்றும் உமாதேவி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது, உமாதேவிக்கு வழங்கப்பட்டுள்ள பொது அதிகார பத்திரத்தின் மீது சந்தேகம் உள்ளதால், நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த வேண்டும். அவரை ஆஜராக சொல்லும்படி, மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கூறினார்.

இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், நித்யானந்தா இந்தியாவில் இல்லை. அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியும் அல்ல என்றார். உடனே நீதிபதி, நித்யானந்தா எங்கிருக்கிறார்? என தெரிய வேண்டும். காணொலி காட்சி மூலம் ஆஜராக சொல்லலாம் எனத் தெரிவித்தார். இதற்கு மனுதாரர் தரப்பில், காணொலி காட்சி மூலம் அவர் ஆஜராக இயலாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும் நித்யானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானவை. அவரது கதவைத் திற காற்று வரட்டும் என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளன. காஞ்சி பெரியவர் கூறியது போல, சன்னியாசி, சன்னியாசியாக இருக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:பிகில் கதை திருட்டு வழக்கு; அட்லீ, அர்ச்சனா கல்பாத்தி பதிலளிக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details