தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீர்காழி அருகே சூரிய சக்தி மின்சாரம் ஆலைக்கு எதிர்ப்பு.. கீழநெப்பத்தூர் மக்கள் எதிர்ப்பு! - solar power plant - SOLAR POWER PLANT

Protest against solar power plant: சீர்காழி தாலுகா கீழநெப்பத்தூர் கிராமத்தில் தனியார் நிறுவனம் சோலார் பவர் பிளான்ட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சூரிய சக்தி மின்சாரம் ஆலை மற்றும் போராட்டம் நடத்திய கிராம மக்களின் புகைப்படம்
சூரிய சக்தி மின்சாரம் ஆலை மற்றும் போராட்டம் நடத்திய கிராம மக்களின் புகைப்படம் (credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 4:54 PM IST

சூரிய சக்தி மின்சாரம் ஆலை மற்றும் போராட்டம் நடத்திய கிராம மக்களின் வீடியோ (credits-ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை:சீர்காழி தாலுகா கீழநெப்பத்தூர் கிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்று, சோலார் பவர் பிளான்ட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு, அதற்கான தடவாளப் பொருட்களும் கொண்டு வந்து வைத்து பணிகளை செய்துள்ளது.

இந்த சோலார் பவர் பிளான்ட் அமைப்பதற்கு அக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆதரவாகவும், பெரும்பான்மையானோர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது. இதனால் கீழநெப்பத்தூர், மேல் நெப்பத்தூர், நெப்பத்தூர் மற்றும் திருநகரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி, இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனை அடுத்து சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படமால் இருக்க, வருவாய்த்துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீக்கப்பட்ட பின்பு இது தொடர்பாக நிரந்தரத் தீர்வு காணப்படும் என அறிவுறுத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பணிகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் நடத்தை விதிகளை திரும்பப் பெற்ற நிலையில், மீண்டும் சோலார் மின் உற்பத்திக்கான பணிகள் தொடங்கப்படும் என்பதால், அதனை முழுமையாக தடுத்து நிறுத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இன்று ஊர் மக்கள் ஒன்றுதிரண்டு, இதுதொடர்பாக கீழநெப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜ்குமார் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்திற்கு அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் செல்லப்பா, சி.பி.ஐ.எம்.எல் கட்சி மாவட்டச் செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் தனியார் சோலார் பவர் பிளான்ட் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஆதரவாக செயல்படுவதைக் கண்டித்தும், சோலார் பவர் பிளான்ட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விரைவில் மக்களை திரட்டி மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:குன்னூர் உழவர் சந்தையில் உலா வந்த ஒற்றை கரடி.. வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை தீவிர நடவடிக்கை! - Bear In Coonoor Market

ABOUT THE AUTHOR

...view details