தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“புகாரளித்த பெண்ணுடன் சமரசம்”.. கார்த்திக் முனுசாமி ஜாமீன் மனுத்தாக்கல்! - Karthik Munusamy Bail

Karthik Munusamy: தனக்கு எதிராக புகாரளித்த பெண்ணுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டுமென சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 6:45 PM IST

சென்னை: சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கார்த்திக் முனுசாமி நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஜாமீன் கோரி கார்த்திக் முனுசாமி சார்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தனக்கும், புகாரளித்த பெண்ணுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதால், தனக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப்போவதில்லை என புகார் அளித்த பெண் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்தப் பெண் சார்பில் நீதிமன்றத்தில் மெமோ தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இதனிடையே, முன்ஜாமீன் கோரி கார்த்திக் முனுசாமி தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, கார்த்திக் முனுசாமி கைது செய்யப்பட்டு விட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முன் ஜாமீன் செல்லாததாகி விட்டதாக கூறிய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details