சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் இன்று (செப்.27) காலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற கே.ஆர்.ஸ்ரீராமுக்கு, உயர் நீதிமன்றத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த விழாவில் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்ட கே.ஆர். ஸ்ரீராமை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வரவேற்றுப் பேசினார்.
அப்போது பேசிய அவர், “சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 1981ஆம் ஆண்டு தமிழ் நன்றாக பேசத் தெரிந்த எம்.எம்.இஸ்மாயில் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். 43 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழ் நன்றாக பேசும் தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார். அவருடைய நீதி பரிபாலனத்துக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிப்பர்” என்றார்.
அவரைத்தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் பாஸ்கர், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் உள்ளிட்ட பலர் புதிய தலைமை நீதிபதியை வரவேற்றுப் பேசினர்.
இதையும் படிங்க:சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு
பின்னர் பேசிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், “தமிழ் தாய்க்கு எனது முதல் வணக்கம். சகோதர, சகோரிகளுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். பள்ளியில் தமிழ் படித்த நிலையில் 500-க்கும் மேற்பட்ட திருக்குறள்களை மனப்பாடம் செய்திருந்தேன். தமிழகத்தின் பாரம்பரியம், கலாச்சாரத்துடன் சென்னை உயர் நீதிமன்றத்தின் பாரம்பரியத்தையும் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கூட்டுப் பொறுப்பு. இந்த பாரம்பரியத்தை காப்பதில் என்னுடைய பங்கும் இருக்கும்.
உயர் நீதிமன்றத்தின் பாரம்பரியத்தை உறுதி செய்வேன் என தெரிவித்த தலைமை நீதிபதி நீதிமன்றம் சுமூகமாக முறையில் இயங்க அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம். திருக்குறள்களை சுட்டிக்காட்டி நடுநிலைமை நடுநிலைமை தவறாது செயல்படுவேன்” என நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, ரகுபதி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்