தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜாபர் சாதிக் ஜாமீன் மனு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற கோப்புப்படம், ஜாபர் சாதிக்
சென்னை உயர்நீதிமன்ற கோப்புப்படம், ஜாபர் சாதிக் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

சென்னை :போதைப் பொருள்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக கடந்த ஜூன் 26ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரின் சகோதரர் அப்துல் சலீம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி எழில் வேலவன் முன் விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத் துறையின் உதவி இயக்குனர் ராகுல் வர்மா பதில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில், "உணவுப் பொருட்கள் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தியதாகவும், போதைப் பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக், முக்கிய மூளையாக செயல்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் மூலமாக கிடைத்த வருமானத்தை ரியல் எஸ்டேட், திரைப்பட தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு திருப்பி விட்டதாகவும், இதற்காக பல்வேறு பினாமி நிறுவனங்களை ஜாபர் சாதிக் நடத்தி உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :ஃபெஞ்சல் புயல் எதிரொலி; 10 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

மேலும், சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தில் ரூ.49 கோடிக்கு மேல் சென்னையில் பல்வேறு இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாகவும், ரூ. 4 கோடியே 38 லட்சத்துக்கு சொகுசு கார்களை வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரிவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கினால், அவர் இதே போன்று தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாலும், சாட்சிகளை கலைப்பதற்கும், ஆவணங்களை அழிப்பதற்கும் வாய்ப்பு உள்ளதாலும், ஜாமீன் வழங்கக் கூடாது என்றும், ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இதேபோல் ஜாபர் சாதிக்-இன் சகோதரர் அப்துல் சலீமிற்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி எழில் வேலவன் முன் நாளை (டிச 03) விசாரணைக்கு வர உள்ளது.

முன்னதாக, திரைப்பட இயக்குநர் அமீர் உள்பட 12 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details