தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"நான் செய்யாமல் யார் செய்யவார்கள்".. முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்! - ஜாக்டோ ஜியோ

Jacto Geo Protest call off: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரைச் சந்தித்துப் பேசிய நிலையில், நாளை (பிப்.14) நடைபெறவிருந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்பரசு தெரிவித்துள்ளார்.

Jacto Geo Protest call off
ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 6:44 PM IST

ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதற்குப் பின்னர், ஜாக்டா ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்பரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான ஆசிரியர்களின் உரிமைக்காக கடந்த 7 ஆண்டு காலமாக போராடி வருகிறோம்.

நேற்றைய தினம் (பிப்.13), மூன்று அமைச்சர்களை நேரில் சந்தித்து பேசினோம். எங்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக, நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கூறினர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு வந்தால் நிறைவேற்றுவோம் என்று அறிவித்திருந்தனர். அதன் அடிப்படையில், எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி வலியுறுத்தி வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "இன்று (பிப்.14) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பேசும்போது, நான் செய்யாமல் யார் செய்வார்கள், நம்பிக்கையோடு இருங்கள். மிக விரைவில் நிச்சயமாக உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்து உள்ளார். மேலும், முதலமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க, நாளை (பிப்.15) நடக்க இருந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம்.

மேலும், 19ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் ஜாக்டோ ஜியோ கூட்டம் கூடி, 26ஆம் தேதி போராட்டம் குறித்து அறிவிப்போம். வருகின்ற 19ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்குள், ஏதேனும் ஒரு அறிவிப்பு வெளியிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. மீண்டும் இது குறித்து முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தனித் தீர்மானம் - சட்டப்பேரவையில் நிறைவேற்றம்..!

ABOUT THE AUTHOR

...view details