கோயம்புத்தூர்:பொள்ளாச்சி அடுத்த ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் அருள் முருகன் மற்றும் சரவண முருகன் ஆகியோரது பிரபல கோழிப்பண்ணை இயங்கி வருகிறது. அதனுடைய தலைமை அலுவலகம் பொள்ளாச்சி வெங்கடேச காலனியில் அமைந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று (ஏப்.8) நள்ளிரவு முதல் இவர்களது அலுவலகம் மற்றும் பண்ணை உள்ளிட்ட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரி சக்திவேல் தலைமையிலான குழு, விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில், அலுவலகத்தில் வைத்திருந்த சுமார் ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.