சிதம்பரம்:சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் நிலையில் தேர்தல் பணிகள் மேற்கொள்வதற்காகச் சிதம்பரம் புறவழிச் சாலை கண்ணன் சாவடி என்ற இடத்தில் தற்காலிகமாக வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்துள்ளார். இந்த வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சிதம்பரத்தில் திருமாவளவனின் தற்காலிக வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை! - VCK Thirumavalavan House IT Raid - VCK THIRUMAVALAVAN HOUSE IT RAID
IT raid at house of VCK Leader Thirumavalavan: சிதம்பரம் வேட்பாளராகப் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தற்காலிகமாக வீட்டில் 5 அதிகாரிகளைக் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
Published : Apr 9, 2024, 11:01 PM IST
இந்த வீட்டில் தற்போது திருமாவளவன் இல்லாத நிலையில் வீட்டின் உரிமையாளர் முன்னிலையில் வீட்டிற்குள் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமான வரித்துறை கமிஷனர் பாலமுருகன் தலைமையில் 5 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீட்டில் பணம் பதுக்கி இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது. திருமாவளவன் வீட்டில் நடைபெறும் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.