தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர்கள் இரவு 7.30 மணிக்குள் விடுதியில் இருக்க வேண்டும் - சென்னை பல்கலை. உத்தரவு..! - CHENNAI UNIVERSITY ANNOUNCEMENT

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் இரவு 7.30 க்குள் விடுதிக்கு வந்துவிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக் கழகம்
சென்னை பல்கலைக் கழகம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2024, 7:13 PM IST

சென்னை:சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி கடந்த 23ஆம் தேதி தனது நண்பருடன் விடுதிக்கு வெளியில் பேசிக்கொண்டிருந்தப் போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

இந்த சம்பவத்தில் கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் (37) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, மாணவியின் வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

கடந்த 23ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரவு 7.45 மணிக்கு ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவியை மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்த ஞானசேகரன் அதனை காட்டி இருவரையும் மிரட்டியதாகவும், பின்னர் ஆண் நண்பரை முதலில் அனுப்பி வைத்துவிட்டு மாணவியை தனியாக ஒரு இடத்திற்கு அழைத்து சென்று ஞானசேகரன் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரக்கமின்றி அத்துமீறிய ஞானசேகரன்

மேலும், பாதிக்கப்பட்ட மாணவி மாதவிடாய் என்று சொல்லியும் கைதான ஞானசேகரன் பாலியல் அத்துமீறலை அரங்கேற்றியதாகவும் அதில் விவரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாதிக்கப்பட்ட மாணவி கடந்த திங்கட்கிழமை இரவு 7.45 மணிக்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், அவரது தோழிக்கு கடந்த சனிக்கிழமையே ஞானசேகரன் பாலியல் தொல்லை அளித்திருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஒருவேளை மாணவிகள் பாதிக்கப்பட்டிருந்தால் தயங்காமல் புகார் கொடுக்கலாம் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க:யார் அந்த சார்..? எப்ஐஆரில் கூறப்பட்டிருப்பது என்ன..? அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கிளம்பும் கேள்விகள்!

இந்த சம்பவத்தை அடுத்து அண்ணா பல்கலைக் கழக மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் மாலை 6. 30 மணிக்கு மேல் வெளியில் செல்ல அனுமதி இல்லை என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் தங்கும் விடுதிகள், வளாகத்தில் பாதுகாப்பை அதிகரிக்க உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில், சென்னை பல்கலை கழகத்தின் பதிவாளர் ஏழுமலை வெளியிட்டுள்ள உத்தரவில், சென்னை பல்கலைக் கழகத்தில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள், மாணவர்கள் யாரும் இரவு 7.30 மணிக்கு மேல் விடுதியில் இல்லாமல், படிப்பதற்காக ஆய்வகம் அல்லது வெளியில் இருக்கக்கூடாது. அவசியம் தேவைப்படும் போது, முன்கூட்டியே உரிய அனுமதியை துறைத் தலைவர்களிடமிருந்து பெற்றிருக்க வேண்டும். மேலும், விடுதியின் மேற்பார்வையாளர், வார்டன் ஆகியோரிடமும் தெரிவிக்க வேண்டும். துறைத் தலைவர்கள், ஆராய்ச்சி மாணவர்களுக்கான வழிகாட்டிகள், மாணவர்கள் இதனை பின்பற்ற வேண்டும்'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details