தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மது அருந்திய இருவர் மருத்துவமனையில் அனுமதி.. பொள்ளாச்சியில் நடந்தது என்ன? - POLLACHI MANJANAICKANUR LIQUOR SICK - POLLACHI MANJANAICKANUR LIQUOR SICK

POLLACHI LIQUOR ISSUE: பொள்ளாச்சி அடுத்த மஞ்சநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த இருவர் மது அருந்தியதால் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், ஒருவேளை இவர்கள் கள்ளச்சாரயம் குடித்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police
போலீசார் விசாரணை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 4:03 PM IST

கோயம்புத்தூர்:பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் இருக்கும் மலைக்கிராமம் மஞ்சநாயக்கனூர். இந்த கிராமத்தில் ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் பெரும்பாலானோர் விவசாய சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்கள். இந்நிலையில், இந்த ஊரைச் சேர்ந்த டீக்கடை நடத்தி வரும் ரவிச்சந்திரன் (55) மற்றும் அவரது நண்பர் மகேந்திரன் (46) ஆகிய இருவரும் சேர்ந்து நேற்று இரவு மது அருந்தியதாக தெரிகிறது.

இந்நிலையில், இன்று (ஜூன் 30) காலை இருவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், இருவரையும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மஞ்சநாயக்கனூர் போலீசார் வந்தனர்.

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், “ரவிச்சந்திரன், மகேந்திரன், ராமகிருஷ்ணன், லட்சுமணன், செந்தில்குமார், முத்துக்குமார், எஸ்.செந்தில்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் மாவடப்பு மலைக்கிராமத்திலிருந்து ஒரு லிட்டர் சாராய பாட்டிலை வாங்கி வந்துள்ளதாகவும், நேற்று இரவு ஏழு பேரும் சேர்ந்து கோபால்சாமி மலை அருகே உள்ள ஒரு தோப்பில் வைத்து குடித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இதனால் இச்சம்பவம் நிகழ கள்ளச்சாராயம் தான் காரணமா? என்ற கோணத்தில் விசாரிக்க வால்பாறை டி.எஸ்.பி ஸ்ரீநிதி தலைமையில், இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் காயத்ரி ஆகியோர் மஞ்சநாயக்கனூர் கிராமத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதன் முதல்கட்ட விசாரணையில், ரவிச்சந்திரன் ரத்த அழுத்தம் அதிகரித்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். மகேந்திரன் உணவு ஒவ்வாமை காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அதுமட்டும்மின்றி, இருவரும் ஒன்றாக மது அருந்தவில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறுகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் இரண்டாம் கட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:தஞ்சாவூரில் மோப்ப நாய் சீசர் உயிரிழப்பு.. துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீசார் அஞ்சலி!

ABOUT THE AUTHOR

...view details