தமிழ்நாடு

tamil nadu

தற்கொலைக்கு முயன்ற மனைவியை காப்பாற்றச் சென்ற கணவரும் தத்தளிப்பு.. கோவில்பட்டியில் நடந்தது என்ன? - Husband and Wife Suicide attempt

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 14, 2024, 3:00 PM IST

Suicide attempt over family dispute: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கணவன் மனைவி இடையே நடந்த குடும்பத் தகராறில் மனைவி தற்கொலைக்கு முயன்றதை அடுத்து, அவரை மீட்க கணவன் போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat)

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்துள்ள குளத்துவாய்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (48). இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (46), இவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கோபித்துக் கொண்ட கிருஷ்ணவேணி, அருகில் உள்ளே தோட்டப் பகுதியில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பின்னர், அவரைக் காப்பாற்ற முயற்சி செய்ய அவரது கணவர் கண்ணனும் கிணற்றுக்குள் குதித்துள்ளார். இந்நிலையில், கிணற்றில் தத்தளித்த இருவரையும் கண்ட மகள் அபர்ணா, கிணற்றின் அருகே இருந்த கயிற்றை கிணற்றுக்குள் வீசியுள்ளார். அதை பிடித்தபடி மனைவியைக் காப்பாற்ற கண்ணன் போராடினார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர், கிணற்றில் குதித்து இருவரையும் மீட்க போராடி வந்தனர். அப்போது, கிருஷ்ணவேணி தன்னை காப்பாற்ற வேண்டாம் எனக் கூறி ஒத்துழைப்பு தராததால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், மீட்புப் படையினர் நீண்ட நேரம் போராடி கிருஷ்ணவேணியை பத்திரமாக மீட்டனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலையைக் கைவிடுக: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 என்கிற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது சிநேகா உதவி எண்ணுக்கு (044-24640050) அழையுங்கள். மேலும், இணைய வழித் தொடர்புக்கு (022-25521111) என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள help@snehaindia.org எனும் மின்னஞ்சல் முகவரியிலும், நேரில் தொடர்புகொள்ள சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம் சென்னை - 600028 என்கிற முகவரிக்கு நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:ரவுடியின் வங்கி கணக்கிற்கு வந்த ரூ.2.5 கோடி.. வலைவீசி தேடும் போலீசார்.. கடலூரில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details