சென்னை:வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் மிகப்பெரிய அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று (திங்கட்கிழமை) கிழமை, சென்னை விமான நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து, வெளிநாடுகளில் இருந்துவந்த விமானங்களை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயிலிருந்து வந்த தனியார் விமானத்தில் வந்த பயணிகளை நிறுத்தி அவர்களிடம்சோதனை மேற்கொண்டனர்.
அப்போது இரண்டு பெண்கள் உட்பட 6 பயணிகள் அவர்களுடைய உடமைகள், உள்ளாடைகள் போன்றவற்றில் மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகள், தங்கப் பசைகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து, நேற்றிரவு வந்த மற்றொரு பயணிகள் விமானத்தில் சுங்கம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.