சென்னை: 2024ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், 2025ஆம் ஆண்டு எத்தனை நாட்கள் பொது விடுமுறை நாட்கள் இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். அதேபோல ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழகத்தில் வரும் 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்களுக்கும் இந்த பொது விடுமுறை பொருந்தும். இந்த பட்டியலில், ஜனவரி 1ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு முதல் பொங்கல் பண்டிகை, தீபாவளி, ரம்ஜான் உட்பட டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் வரையில் மொத்தமாக 23 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், 2025ஆம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் சில வார இறுதி நாட்களை ஒட்டி வருவதால் மூன்று நாள்கள், நான்கு நாள்கள், ஐந்து நாள்கள் என தொடர்ச்சியாக பல விடுமுறை நாள்கள் வருகின்றன.
இதுபோன்ற விடுமுறைகள் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாது சுற்றுலா செல்பவர்களுக்கும் உதவியாக இருக்கும். எனவே 2025ஆம் ஆண்டில் அரசு விடுமுறை, வார இறுதி நாட்களை ஒட்டி தொடர்ச்சியாக வரும் விடுமுறை நாள்கள் எந்தெந்த மாதங்களில் வருகிறது என்பது குறித்து இங்கு காணலாம்.
அரசு பொது விடுமுறை நாட்கள்:
வ.எண்
பொது விடுமுறை
தேதி
கிழமை
1
ஆங்கிலப் புத்தாண்டு
01.01.2025
புதன்
2
பொங்கல்
14.01.2025
செவ்வாய்
3
திருவள்ளுவர் தினம்
15.01.2025
புதன்
4
உழவர் திருநாள்
16.01.2025
வியாழன்
5
குடியரசு தினம்
26.01.2025
ஞாயிறு
6
தை பூசம்
11.02.2025
செவ்வாய்
7
தெலுங்கு வருடப்பிறப்பு
30.03.2025
ஞாயிறு
8
ரம்ஜான்
31.03.2025
திங்கள்
9
வணிக வங்கிகள் & கூட்டுறவு வங்கிகளின்
கணக்குகள் ஆண்டு நிறைவு
01.04.2025
செவ்வாய்
10
மகாவீர் ஜெயந்தி
10.04.2025
வியாழன்
11
தமிழ் வருடப்பிறப்பு
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாள்
14.04.2025
திங்கள்
12
புனித வெள்ளி
18.04.2025
வெள்ளி
13
மே தினம்
01.05.2025
வியாழன்
14
பக்ரீத்
07.06.2025
சனி
15
முஹர்ரம்
06.07.2025
ஞாயிறு
16
இந்திய சுதந்திர தினம்
15.08.2025
வெள்ளி
17
கிருஷ்ண ஜெயந்தி
16.08.2025
சனி
18
விநாயகர் சதுர்த்தி
27.08.2025
புதன்
19
மிலாடி நபி
05.09.2025
வெள்ளி
20
ஆயுத பூஜை
01.10.2025
புதன்
21
விஜய தசமி மற்றும் காந்தி ஜெயந்தி
02.10.2025
வியாழன்
22
தீபாவளி
20.10.2025
திங்கள்
23
கிறிஸ்துமஸ்
25.12.2025
வியாழன்
ஜனவரி: 1ஆம் தேதி - புத்தாண்டு, 14ஆம் தேதி - பொங்கல், 15ஆம் தேதி - திருவள்ளுவர் தினம், 16ஆம் தேதி - உழவர் திருநாள், 26ஆம் தேதி - குடியரசு தினம் என ஜனவரி மாதத்தில் மொத்தமாக ஐந்து நாட்கள் பொது விடுமுறை உள்ளது. இதில், 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையில் பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் என தொடர்ந்து மூன்று நாட்கள் பொது விடுமுறை உள்ளது. இந்த நாட்களுக்கு முந்தைய மூன்று நாட்களில் ஜனவரி 11,12 ஆகிய தேதிகள் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளாக உள்ளது 13ஆம் தேதி போகி பண்டிகையாக உள்ளது. ஆனால், போகி பண்டிகைக்கு விடுமுறை இல்லை என்றாலும் கூட நீங்கள் சுற்றுலாவுக்கு திட்டமிட்டால் அந்த ஒருநாள் மட்டும் விடுமுறை எடுத்தால் போதுமானது ஜனவரி மாதத்தில் தொடர்ந்து 6 நாள்கள் விடுமுறை கிடைக்கும்.
மார்ச்: மார்ச் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகை அதனைத் தொடர்ந்து வரும் மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகள் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளாக உள்ளதால்மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. அதேபோல், மார்ச் 31 திங்கள் அன்று ரம்ஜான் அதற்கு முந்தைய இரண்டு நாட்களான மார்ச் 29 மற்றும் 30 ஆகிய தேதிகள் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளாக உள்ளது. எனவே அப்போதும் ஒருமுறை மூன்று நாட்கள் தொடர் விடுமுறை இருக்கிறது.
ஏப்ரல்: ஏப்.10ஆம் தேதி வியாழன் அன்று மஹாவீர் ஜெயந்தி வருகிறது. ஆகவே ஏப்ரல் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளும்பட்சத்தில், அடுத்து ஏப்ரல் 12 மற்றும் 13 ஆகியவை வார இறுதி நாள்களாகும். இதனால் நான்கு நாள்கள் விடுமுறை கிடைக்கும். அதேபோல், வெள்ளிக்கிழமையான ஏப்ரல் 18ஆம் தேதி புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. எனவே, ஏப்ரல் 19, 20 ஆகியவை வார இறுதி நாள்களாக இருப்பதால் இதிலும் நான்கு நாள்கள் விடுமுறை கிடைக்கிறது. ஆகவே, ஏப்ரல் மாதம் ஏராளமான விடுமுறைகள் நிறைந்த மாதமாக உள்ளது.
மே: மே மாதத்தில் 10 மற்றும் 11 ஆகிய தேதிகள் வார இறுதி நாள்களாக உள்ளது. அதன் தொடர்ச்சியாக வரும் மே 12ஆம் தேதி புத்த பூர்ணிமா கொண்டாடப்படுவதால் மே மாதத்தில் மொத்தமாக மூன்று நாள்கள் தொடர்ச்சியாக விடுமுறை உள்ளது.
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர்: ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய சுதந்திர தினம், அதற்கு அடுத்த நாள் ஆகஸ்ட் 16ஆம் தேதி சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, ஆகஸ்ட் 17ஆம் தே ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆகஸ்ட் மாதத்தில் மூன்று நாள்கள் தொடர் விடுமுறைகள் கிடைக்கும். அதேபோல செப்டம்பர் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்து வரும் இரண்டு நாள்கள் வார இறுதி நாள்கள் என்பதால் தொடர்ச்சியாக மூன்று நாள்கள் விடுமுறை கிடைக்கிறது.
அக்டோபர்: அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வியாழன் அன்று ஆயுத பூஜை மற்றும் அக்டோபர் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை விஜய தசமி மற்றும் காந்தி ஜெயந்தி கொண்டாடுப்படுகிறது என்பதாலும் அடுத்த இரண்டு நாட்கள் வார இறுதி என்பதாலும் மொத்தம் நான்கு நாள்கள் விடுமுறை கிடைக்கும். அதே நேரத்தில், அடுத்தாண்டு தீபாவளி அக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது. எனவே, அதற்கு முந்தைய இரண்டு நாள்கள் அக்டோபர் 18 மற்றும் 19 ஆகியவை வார இறுதி நாட்கள் என்பதால் தீபாவளிக்கு மூன்று நாள்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர்: டிசம்பர் 25 ஆம் தேதி வியாழன் அன்று கிறிஸ்துமஸ் மற்றும் டிசம்பர் 26 வெள்ளிக்கிழமை அன்று ஒருநாள் மட்டும் விடுமுறை எடுத்தால் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்களும் வார இறுதி நாள்களில் வருவதால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும்.