தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழகத்தில் எந்த மர்ம காய்ச்சலும் இல்லை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி! - Minister Ma Subramanian

நிபா வைரஸ் தமிழ்நாட்டில் இல்லை. கேரள - தமிழக எல்லைகளான 13 பகுதிகளில் சுகாதாரத்துறையின் சார்பில் நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2024, 4:46 PM IST

சென்னை:சின்ன போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட 9 அரசு பள்ளிகளில் பயிலும் 1,480 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தொடர்ந்து கடந்த ஆண்டு மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவியருக்கு நிதி மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மதுரவாயல் எம்எல்ஏ கணபதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது, “ கடந்த 3 கல்வி ஆண்டுகளில் 16 லட்சத்து 73 ஆயிரத்து 374 மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு அர்சு சார்பில் ரூ. 821 கோடி செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக சென்னையில் மட்டும் 82 ஆயிரத்து 512 மாணவ, மாணவிகள் பயன் பெற்றுள்ளனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் உறுதி.. உதயநிதி துணை முதல்வர்? மு.க.ஸ்டாலின் பதில்!

டெங்கு காய்ச்சல்:டெங்கு காய்ச்சலின் பரவல் குறையத் தொடங்கி தமிழகத்தில் கட்டுப்பாட்டில் இருக்கிறது. டெங்கு உயிரிழப்புகளை பொறுத்தவரையில் 2016, 2017ஆம் ஆண்டுகளில் டெங்கு பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டிருந்தன. அந்த நிலை தற்போது இல்லை. ஜனவரியில் இருந்து தற்போதுவரை 5 இறப்புகள் பதிவாகியுள்ளது. நிபா வைரஸ் தமிழ்நாட்டில் இல்லை.

கேரள - தமிழக எல்லைகளான 13 பகுதிகளில் சுகாதாரத்துறையின் சார்பில் நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எல்லை கடந்து வருபவர்களிடம் வெப்பநிலைமாணி கொண்டு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இது தவிர குரங்கம்மை நோய்க்கென தமிழகத்தில் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. தற்போது தமிழகத்தில் எந்த மர்மக் காய்ச்சலும் இல்லை. மழைக்காலம் வருவதால் எங்கும் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details