தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாஞ்சோலை தோட்டத்தை வனப்பகுதியாக மாற்றக்கோரிய வழக்கு.. ஆக.14ம் தேதி விரிவான விசாரணைக்கு ஒத்திவைப்பு! - Manjolai Estate Issue - MANJOLAI ESTATE ISSUE

Manjolai Estate Issue: மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதி முழுவதையும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றுவதற்கு, வல்லுநர் குழு அமைத்து அதன் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியை வழக்கை மாஞ்சோலை தொடர்பான பிற வழக்குகளோடு சேர்த்து ஆகஸ்ட் 14ஆம் தேதி பட்டியலிட உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை
உயர் நீதிமன்றம் மதுரை கிளை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 9, 2024, 7:33 AM IST

மதுரை:மதுரையைச் சேர்ந்த சுந்தரராஜ் என்பவர் மாஞ்சோலை எஸ்டேட் தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "மாஞ்சோலை தேயிலை தோட்டம் பாம்பே பர்மா டிரேடிங் நிறுவனத்துக்கு 99 ஆண்டு கால குத்தகைக்கு வழங்கப்பட்டது. தற்போது பிபிடிசி நிறுவனம் அங்கிருந்து வெளியேறும் சூழலில், வனத்தை குத்தகை காலத்திற்கு முன்பிருந்த நிலைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன உயிரினங்கள் காடுகளில் உணவு தேட செல்வதற்கு இந்த தேயிலைத் தோட்ட பகுதியை கடந்து செல்லும் நிலை உள்ளது. ஆகவே தேயிலைத் தோட்டத்தை வனமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதி முழுவதையும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றுவதற்கு, வல்லுநர் குழு அமைத்து அதன் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், "மாஞ்சோலை தொடர்பான பிற வழக்குகளோடு இந்த வழக்கையும் சேர்த்து ஆகஸ்ட் 14 ம் தேதி அன்று பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: நடுக்கடலில் தத்தளித்த சென்னை மீனவர்..கடலோர காவல் படையால் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details