தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநின்றவூர் அருகே ஜிம் பயிற்சியாளர் தற்கொலை..! போலீசார் தீவிர விசாரணை.. - Chennai Suicide - CHENNAI SUICIDE

Chennai Suicide: திருநின்றவூர் அருகே ஜிம் பயிற்சியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Suicide
சென்னை தற்கொலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 28, 2024, 12:35 PM IST

சென்னை: சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூர் நத்தமேடு ஊராட்சி குமரன் தெருவில் வசித்து வந்த கணேஷ் என்ற இளைஞர், ஜிம் பயிற்சியாளராக (Gym Trainer) பணியாற்றி வந்தார். இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் வசித்த வீட்டிற்குள் மழைநீர் புகுந்ததால், அந்த இடத்தில் இருந்து லட்சுமி திரையரங்கம் அருகில் வாடகை வீட்டில் தனது தாய் அலமேலு மற்றும் சகோதரர் ரோகித் ஆகியோருடன் வசித்து வந்தார்.

இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், வேலைக்கு சென்று அவ்வப்போது அவரை சந்தித்து பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வழக்கம் போல், ஜிம்மை திறப்பதற்காக சென்ற அவர், நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது சகோதரர் ரோகித் ஜிம்மில் உள்ளவர்களுக்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அப்போது, அவர்கள் கணேஷ் ஏற்கெனவே சென்றுவிட்டதாக பதிலளித்துள்ளனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல

இதனால், உடனே சந்தேகமடைந்த ரோகித், அவர்களது பழைய வீட்டிற்கு சென்று பார்த்தபோது, கணேஷ் வாயில் நுறை வெளியேறிய நிலையில், மயங்கி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, உயிரிழந்த கணேஷின் உடலை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இது தொடர்பாக திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கணேஷ் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இயல்பாக சுற்றித்திரிந்த இளைஞர், திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:விவாதத்துக்குள்ளாகிய செறிவூட்டப்பட்ட அரிசி நல்லதா? கெட்டதா? உணவியல் ஆலோசகர் கூறுவது என்ன? - Fortified Rice

ABOUT THE AUTHOR

...view details