தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் பயணியின் கன்னத்தில் அறைந்த நடத்துனர் பணியிடை நீக்கம்! - GOVT BUS CONDUCTOR

நெல்லையில் அதிகளவு லக்கேஜ்களுடன் பேருந்தில் ஏற முயன்ற பயணியை நடத்துனர் கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலனாதை தொடர்ந்து புகாருக்குள்ளானவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பயணியை தாக்கிய நடத்துனர்
பயணியை தாக்கிய நடத்துனர் (Photo Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2024, 4:18 PM IST

Updated : Nov 4, 2024, 5:45 PM IST

திருநெல்வேலி:நெல்லையில் அதிகளவு லக்கேஜ்களுடன் பேருந்தில் ஏற முயன்ற பயணியை நடத்துனர் கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலனாதை தொடர்ந்து புகாருக்குள்ளானவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப் பட்டியலில் இருந்து திருநெல்வேலி டவுன் நோக்கி இன்று காலை 8:30க்கு அரசு பேருந்து ஒன்று கிளம்பியது. அந்த பேருந்தில் அதிகளவு லக்கேஜ்களுடன் ஏற வந்த பயணி ஒருவரை பேருந்தில் இருந்த நடத்துனர் தகாத வார்த்தைகளால் பேசி பேருந்தில் ஏற விடாமல் தடுத்ததோடு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அறைந்தார்.

இந்த சம்பவத்தை பார்த்த சக பயணி ஒருவர் ஏன் பயணியை அடித்தீர்கள் என கேள்வி எழுப்பிய போது அவரையும் நடத்துனர் ஓங்கி கன்னத்தில் அறைந்துள்ளார். இதற்கிடையில் இச்சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதனால், பயணியை நடத்துநர் தாக்கிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க:16 வயது சிறுமி கொலை வழக்கு: கணவன் மனைவி உட்பட ஆறு பேர் நீதிமன்ற காவலில் அடைப்பு!

பயணியை நடத்துனர் கன்னத்தில் அறையும் வீடியோ வைரலானதை தொடர்ந்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட பயணியை தாக்கியது நெல்லை கட்டப்பொம்மன் நகர் பணிமனையை சேர்ந்த நடத்துனர் சேதுராமலிங்கம் என்பது தெரியவந்தது. இதையடுத்து பணி நேரத்தில் பயணியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட புகாரில் சேதுராமலிங்கத்தை பணியிடை நீக்கம் செய்து நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் பயணிகளிடம் தரக் குறைவாக நடந்து வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. இனி இது போன்ற சம்பவங்கள் நேராமல் போக்குவரத்துறையினருக்கு உயர் அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Last Updated : Nov 4, 2024, 5:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details