தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

20 பயணிகளை காப்பாற்றி உயிரை விட்ட ஓட்டுநர்.. சென்னையில் சோகம்! - BUS DRIVER DIES

பேருந்தை ஓட்டும்போது நெஞ்சுவலி ஏற்பட்டு அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு. 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்ற நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டும் சாதுரியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

உயிரிழந்த ஓட்டுநர் ஸ்ரீதர்
உயிரிழந்த ஓட்டுநர் ஸ்ரீதர் (Photo Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2024, 5:04 PM IST

சென்னை:திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் பூந்தமல்லியில் இருந்து சுங்குவார்சத்திரம் வரை செல்லக்கூடிய தடம் எண் 578 பேருந்து ஓட்டுனரான பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏற்றிக் கொண்டு ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி பேருந்தை இயக்கி கொண்டு இருந்தார்.

அப்போது ஓட்டுநர் ஸ்ரீதர்க்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு பேருந்தை ஓரங்கட்டி நிறுத்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில் உடனடியாக பயணிகள் உதவியுடன் ஓட்டுநரை மீட்ட நடத்துனர், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

இதையும் படிங்க:மலைப் பகுதியில் கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற மக்கள்.. திருப்பூர் அருகே பாதை வசதி அமைக்க கோரிக்கை!

அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே ஸ்ரீதர் இறந்து போனார். இதனையடுத்து ஸ்ரீதரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நெஞ்சு வலி ஏற்பட்டு அரசு பேருந்து ஓட்டுநர் சம்பவம் சக ஊழியர்கள் இடையே பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details