நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர், அம்மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், அவர் படித்து வந்த கல்லூரி சார்பாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடுத்துள்ள ஒரு தனியார் ஹோட்டலுக்கு 3 மாத பயிற்சிக்கு அப்பெண் அனுப்பப்பட்டுள்ளார்.
அங்கு சில மாணவிகளுடன், இவர் தங்கி பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், சிறுமி இரவு நேரத்தில் அந்த ஹோட்டலில் உள்ள கழிவறையில் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அதனை அடுத்து, ஹோட்டல் ஊழியர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக செம்மேட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர், சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதனிடையே, சிறுமியின் மரணம் குறித்து தகவல் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.