அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்திரி ரகுராம் நியமனம்!
Gayathri Raghuram: அதிமுகவின் மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
Etv Bharat
Published : Mar 2, 2024, 9:16 PM IST
சென்னை:இது தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் காயத்ரி ரகுராம், இன்று முதல் நியமிக்கப்படுகிறார். தொண்டர்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.