திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், சேவுகம்பட்டி பேரூராட்சி தி.மு.க. செயலாளர் தங்கராஜ். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு சேவுகம்பட்டி பகுதியைச் சேர்ந்த அமலோற்பவம் என்பவரிடம் 62 சென்ட் நிலத்தை கிரையம் வாங்கி விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2023 டிசம்பரில் சேவுகம்பட்டி பகுதியைச் சேர்ந்த மரியலூயிஸ் உறவினர்களான மகன்கள், பெலிக்ஸ் மார்ட்டின், நெல்சன், மகள்கள் அருள் ஜெசிந்தா மேரி, சகாய செல்வி, மருமகள் அந்துவான் கிறிஸ்டி, பேரன் கெவின் மைக்கேல் ஆகிய 6 நபர்களும் திமுக பிரமுகர் தங்கராஜ் வாங்கிய நிலம் தங்களுடைய பூர்வீக நிலம் எனக் கூறி, அய்யம்பாளையம் சார்பதிவாளர் பாலமுருகன் முன்னிலையில் போலியாக ஆவணங்களைத் தயாரித்து, மதுரை அடுத்த உத்தங்குடியில் வசிக்கும் கிறிஸ்டோபர் சாமுவேல் என்பவருக்கு 2023 ஆகஸ்ட் 2-ஆம் தேதி விற்பனை செய்து உள்ளார்.
இந்நிலையில் மறுநாள் 3-ஆம் தேதி கிறிஸ்டோபர் சாமுவேல் பெயரில் இருந்த 62 சென்ட் நிலத்தை, மரியலூயிஸ் மகள் சகாயசெல்வி, தனது பெயரில் அய்யம்பாளையம் சார்பதிவாளர் பாலமுருகன் முன்னிலையில் மாற்றி உள்ளார்.