சேலம்: கேரள மாநிலம் சொரனூர் ரயில் நிலையத்தில் தூய்மை பணியில் இருந்த தமிழகத்தை சேர்ந்த 4 தூய்மை பணியாளர்கள் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் அவரகளது உடல் சேலத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது
கேரள மாநிலம் பாலக்காடு அருகே பாரதப்புழா ஆற்றின் மீது சொரனூர் ரயில் நிலையம் உள்ளது. அங்கு தொழிலாளர்கள் பலர் நேற்று ரயில் பாதையில் இருந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த ரயில் பாதையை கடந்த டெல்லி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி லட்சுமணன், ராணி, வள்ளி உள்ளிட்ட நால்வர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நடந்த போது பத்து தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டதாகவும், அதில் ரயில் வருவதை அறிந்து ஆறு பேர் தண்டவாளத்தில் இருந்து வெளியே ஓடியதால் உயிர்த்தப்பியதாகவும் கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த நான்கு பேரும் சேலம் மாவட்டம் அயோத்தியபட்டணம் அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டி ஊராட்சிக்கு உட்ப்பட்ட அடிமலைப்புதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். லட்சுமணன் அவரது மனைவி வள்ளி, காரைக்காடு கிராமத்தை சேர்ந்த வள்ளியின் தம்பி லட்சுமணன், அவரது மனைவி ராணி என்பதும் தெரியவந்துள்ளது.