சென்னை: சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாம் முரளி(22). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது ஏற்கனவே 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று(ஏப்.29) மாலை புதுவண்ணாரப்பேட்டை M.P.T குடியிருப்பு பகுதியில் பாம் முரளி மது அருந்திக் கொண்டிருக்க, அருகாமையில் மது அருந்திக் கொண்டிருந்த மற்றொரு ரவுடியான மனோஜ் கும்பலுடன் பாம் முரளியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில், ஆத்திரமடைந்த மனோஜ் கட்டையை எடுத்து பாம் முரளி தலையில் அடித்துள்ளார். பின்னர், பாம் முரளி தனது கூட்டாளிகளுடன் வந்து கத்தியால் மனோஜின் தலையிலும், தொடையிலும் வெட்டியுள்ளார்.