கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், செல்புரம் அடுத்த தெலுங்குபாளையம் பகுதியில் வசித்து வருவபர், ராமசந்திரன் (54). இவரது மனைவி விசித்ரா (46), மகள்கள் ஸ்ரீநிதி (25) மற்றும் ஜெயந்தி (14). ஸ்ரீநிதி கனடாவில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, சில நாட்களுக்கு முன் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை நீண்ட நேரமாக இவர்களின் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில், செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் கதவை உடைத்து பார்த்த பொழுது, நான்கு பேரும் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. பின்னர் நான்கு பேரின் உடலையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு உடல்களை அனுப்பி வைத்தனர்.