தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை ரத்து! - CHENNAI AIRPORT FLIGHT CANCELLED

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் மற்றும் பெங்களூரில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் இருந்து டெல்லி செல்லும் 15க்கும் மேற்பட்ட விமானம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் நிலையில் மறுமார்கத்திலுள்ள விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இண்டிகோ விமானம் கோப்புப் படம்
இண்டிகோ விமானம் கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2025, 5:58 PM IST

சென்னை:டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் மற்றும் பெங்களூரில் நிலவும் பனிமூட்டம் காரணமாக இன்று (ஜனவரி 4) சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட விமான நிலையம் செல்லும் சுமார் 15க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்ற நிலையில் டெல்லி மற்றும் பெங்களூரில் இருந்து சென்னை வரவேண்டிய இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

  • அதில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்.
  • அதிகாலை 4.20 மணிக்கும், அதிகாலை 4.30 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்.
  • காலை 8 மணிக்கு மேலாகவும், அதிகாலை 5.55 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்.
  • காலை 8 மணிக்கும், காலை 6 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம்.
  • காலை 6.50 மணிக்கும், காலை 7 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம்.
  • காலை 8 மணிக்கு மேலும், காலை 8 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்.
  • காலை 10 மணிக்கு மேலாகவும், தாமதமாக புறப்பட்டு செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதோடு காலை 7:15 மணிக்கு டெல்லியில் புறப்பட்டு காலை 10 மணிக்கு சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஓடுதளத்தில் தீப்பற்றி எரிந்த தென்கொரிய விமானம்.. 181 பேரில் 179 பயணிகள் பலி?

அதேபோல் பெங்களூரிலும் பனிமூட்டம் நிலவுவதால்,

  • இன்று அதிகாலை 5 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு, 6 மணிக்கு சென்னைக்கு வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • அதைப்போல் காலை 7.30 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று தாமதமாக பெங்களூர் புறப்பட்டு சென்றது.

இதேபோல் டெல்லியில் இருந்து வரும் விமானங்களும் தாமதமாக சென்னைக்கு வரும் நிலையில் அந்தமான், விஜயவாடா, விசாகப்பட்டினம், ஹைதராபாத் உள்ளிட்ட விமானங்களும் தாமதமாகி உள்ளன. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details