திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் இம்ரான் பாஷா. இவர் அதே பகுதியில் பழைய துணிகளை புதுப்பித்து மறுவிற்பனை செய்யும் குடோன் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) பழைய துணிகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில், குடோனில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் தீயில் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆம்பூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்து, இரண்டு தீயணைப்பு வாகனத்தில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.