தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"போலீஸ் விசாரித்தது உண்மைதான்! ஆனால்..." - நெல்சன் மனைவி அளித்த விளக்கம் - ARMSTRONG MURDER CASE

ARMSTRONG MURDER CASE: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி மொட்டை கிருஷ்ணனுக்கு இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷாவிற்கும் வங்கி பண பரிவர்த்தனைகள் இருந்ததாக செய்திகள் வெளியான நிலையில், மோனிஷா சார்பில் அவரது வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்து பொது நோட்டீஸ் வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் மற்றும் நெல்சன் மனைவி மோனிஷா
ஆம்ஸ்ட்ராங் மற்றும் நெல்சன் மனைவி மோனிஷா (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2024, 11:10 AM IST

Updated : Aug 22, 2024, 4:38 PM IST

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, முன்னாள் அதிமுக, திமுக, பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள், வழக்கறிஞர்கள் என இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இக்கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் அவரை, செல்போன் எண் தொடர்புகளை வைத்து, அவர் யார், யாரிடம் பேசியுள்ளார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மொட்டை கிருஷ்ணனுடன் பேசியதாக திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் இது குறித்து நெல்சன் மனைவி மோனிஷாவின் தரப்பு வழக்கறிஞர் பொது அறிவிப்பு நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மோனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் குறித்து விசாரணை நடத்த அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பியதாகவும், அதற்கு மோனிஷா நேரில் ஆஜராகி உரிய விளக்கங்கள் கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மோனிஷா தரப்பு விளக்க நோட்டீஸ் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில் நேற்று மோனிஷாவிற்கும், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கும் வங்கி பண பரிவர்த்தனைகள் இருந்ததாக செய்திகள் வெளியான நிலையில், இது அடிப்படை ஆதாரம் அற்ற தவறான செய்தி என்று அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனர். இந்தச் செய்தியை திருத்த வேண்டும் என்றும், இல்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல் வங்கி பண பரிவர்த்தனைகள் தொடர்பான எந்தவித ஆதாரங்களும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சில விளக்கங்கள் மட்டுமே வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் குறித்து மோனிஷாவிடம் கேட்டிருந்ததாகவும், அனைத்து விசாரணையும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி நடந்து முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோனிஷா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனர்.

join ETV Bharat WhatsApp channel click here (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:கொலைக்கு மூளையே மொட்டை கிருஷ்ணன்? வெளிநாட்டில் தப்பியவரை பிடிக்க போலீஸ் தீவிரம்! - MOTTAI KRISHNAN

Last Updated : Aug 22, 2024, 4:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details