தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியை அழைத்து வரச் சென்ற கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஜோலார்பேட்டையில் பயங்கரம்! - Husband bike set fire

Bike set on fire: திருப்பத்தூர் அருகே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாமியார் வீட்டிற்குச் சென்ற மனைவியை அழைத்து வரச் சென்ற கணவரின் இருசக்கர வாகனத்தை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எரிந்த நிலையில் பைக் புகைப்படம்
எரிந்த நிலையில் பைக் புகைப்படம் (Credits - ETV Bharat TamilNadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2024, 3:23 PM IST

Updated : May 4, 2024, 4:08 PM IST

முத்துக்குமார் பேசிய வீடியோ (Credits - ETV Bharat TamilNadu)

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சின்னகம்மியம்பட்டைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (36). இவருக்கும், நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த சசிகலா (30) என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, 3 ஆண் பிள்ளைகள் உள்ளன.

இந்த நிலையில், கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் நாட்றம்பள்ளியில் உள்ள தனது தயார் வீட்டுக்கு சசிகலா சென்றுள்ளார். இதற்கிடையில் பல முறை முத்துக்குமார், தன்னுடைய மாமியார் வீட்டிற்குச் சென்று சசிகலாவை வீட்டிற்கு அழைத்துள்ளார், ஆனால், அதற்கு சசிகலா மறுப்பு தெரிவித்து, தன்னுடைய தாயார் வீட்டிலேயே கடந்த 2 வருடங்களாக இருந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், இன்று காலை தனது மனைவியை அழைத்து வர வேண்டி, இருசக்கர வாகனத்தில் தன்னுடைய மாமியார் வீட்டிற்குச் சென்று, சசிகலாவை வீட்டிற்கு அழைத்து உள்ளார். அப்போது சசிகலாவிற்கும், முத்துக்குமாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சசிகலா மற்றும் அவரின் தாயாரான சின்ன பாப்பா ஆகிய இருவரும் சேர்ந்து, முத்துகுமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொளுத்தி உள்ளனர். இதனால் இருசக்கர வாகனம் தகதகவென எரிந்து முற்றிலும் நாசமாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மொபைல் சூடாகிறதா? காரணம் என்ன? சரி செய்வது எப்படி? தெரிந்துகொள்ளுங்கள்.!

Last Updated : May 4, 2024, 4:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details