தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜய் கட்சியால் திமுகவுக்கு தான் பாதிப்பு; அதிமுக முன்னாள் அமைச்சர் கூல் பேட்டி! - jayakumar criticized dmk - JAYAKUMAR CRITICIZED DMK

EX Admk Minister Jayakumar: சனாதன மாநாடு நடத்திவிட்டு, பாஜகவை திருப்திப்படுத்துவதற்காக பழனியில் முருகன் மாநாடு நடத்தப்பட்டது எனவும், நடிகர் விஜய்யை பார்த்து திமுக ஏன் பயப்புடுகிறது எனவும், விஜய் கட்சி ஆரம்பிக்கும்போது திமுகவுக்கு தான் பாதிப்பு ஏற்படும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2024, 9:42 PM IST

சென்னை:சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை எம்.எஸ்.நாயுடு தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இராயபுரம் பகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று இராயபுரம் பகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையின் புறநகர் பகுதிகளில் நடத்தி இருக்கலாம். இதற்காக மாநகராட்சி, நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் கவனம் செலுத்தினார்கள். விளையாட்டுத்துறை அரசு துறை சார்ந்த அதிகாரிகள் இதில் தொடர்ந்து கவனம் செலுத்தினார்கள். ஒட்டுமொத்தமாக ஒரு மாத காலமாக முழுக்க முழுக்க அரசு நிர்வாகமும் சரி, அரசின் கீழே இருக்கக்கூடிய நிர்வாகமும் சரி, மாநகராட்சியும், ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தான் கவனம் செலுத்தினார்கள்.

மற்ற பிரதான சாலைகளுக்கு கவனம் செலுத்தவில்லை. குண்டும், குழியுமாக உள்ள சாலைகளில் கவனம் செலுத்தவில்லை. வருகின்ற காலம் பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. செப்டம்பர், அக்டோபர் நவம்பர் என மூன்று மாதத்திற்கு மழை உள்ளது.

முன்னேற்பாடான நடவடிக்கைகளுக்கு மாநகராட்சி தரப்பிலோ, அரசு தரப்பிலோ கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு கார் பந்தயத்திற்கு முழுமையான கவனத்தை செலுத்தி, பத்தாயிரம் பேர் மகிழ்ச்சிக்காக பத்து லட்சம் பேரை சித்ரவதை செய்தார்கள்.

கார் பந்தயத்திற்கான FIA சான்றிதழ் முன்னாடியே வாங்க வேண்டும். ஆனால், எல்லாம் தயார் செய்து விட்டு சான்றிதழ் வாங்குகிறார்கள். முதல் நாள் பயிற்சி போட்டி மட்டும் தான் நடந்தது. ஏற்கனவே 48 கோடி செலவு செய்தார்கள் அந்த பணத்தை திருப்பி கொடுத்து விட்டார்களா?. தற்பொழுது டிக்கெட் விலையும் அதிகம். அப்போ எவ்வளவு கோடி வந்திருக்கும்? எவ்வளவு டிக்கெட் விற்பனை செய்துள்ளது அரசு? என்ன செய்து இருக்கிறது? காவல்துறை தான் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பேட்டா கொடுத்தார்களா? கொடுக்கவில்லை.

திருடனை பிடிப்பதை விட்டுவிட்டு, காவல் துறையில் உள்ள பணிகளை விட்டுவிட்டு கார் பந்தியத்தில் பாதுகாப்பிற்கு நிற்கின்றனர். கார் பந்தயத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்களுக்கு பேட்டா கொடுத்தீர்களா? மின்சார ஊழியர்களுக்கு ஏதாவது கொடுத்தார்களா? மாநகராட்சிக்கு எவ்வளவு பணம் கட்டியிருக்கிறார்கள்? என்று வெளிப்படத் தன்மை இல்லை. இதை எல்லாம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் போட வேண்டும்.

மழைநீர் வடிகால்வாய் பணிக்கு எந்தவிதமான முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. இந்த அரசாங்கம் Careless அரசாங்கம். இது கண்டிக்கத்தக்கது. அதிகாரத்தில் அரசாங்கம் இருக்கும் போது பெரிய அளவில் திரைப் பிரபலங்களை அழைத்து கார் பந்தயத்தை பற்றி பாராட்ட வேண்டும் என பேச வைக்கிறார்கள்.

முருகன் மாநாடு : மதசார்பற்ற நாடு, மதசார்பற்ற மாநிலம் ஒரு மதத்திற்கு மட்டும் எப்படி மாநாடு நடத்தலாம் என்பது திமுக கூட்டணியின் கேள்வி. திமுக மதத்தை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். படிப்பது ராமாயணம், இடிப்பது பிள்ளையார் கோயில் என்பது போல் திமுக செயல்படுகிறது. சனாதான மாநாடு நடத்திவிட்டு, பாஜகவை திருப்திப்படுத்துவதற்காக பழனியில் முருகன் மாநாடு நடத்தப்பட்டது.

திமுக கூட்டணிகளுக்கு இது பிடிக்கவில்லை. இதன் தாக்கம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தெரிய வரும். 2026 நெருங்க, நெருங்க திமுக கூட்டணிக் கட்சிகள் இருக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கும்.

விஜய் அரசியல் விவகாரம் : இந்தியா ஜனநாயக நாடு தமிழ்நாட்டில் ஜனநாயகம் உண்டு. யார் வேண்டுமானாலும் மாநாடு நடத்தலாம். யார் வேண்டுமானாலும் கட்சி நடத்தலாம். அப்படி இருக்கும்போது விஜய்யை கண்டு ஏன் திமுக பயப்புடுகிறது? விஜய் கட்சி ஆரம்பிக்கும் போது திமுகவுக்கு தான் பாதிப்பு ஏற்படும். அதன் ஓட்டு விஜய்க்கு சென்று விடும் என திமுக பயப்படுகிறது. இது திமுகவின் எண்ணம்.

திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவிற்கு தான் வரும். இது அடிப்படையான விஷயம். ஒவ்வொரு தேர்தலிலும் நடைபெறக்கூடிய விஷயம். வாக்குகள் சிதறாது என எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. திமுக மீது கோபம் கொள்பவர்கள் அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள்" என கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க :தூத்துக்குடி மீனவர்களுக்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த இலங்கை நீதிமன்றம்! - Fishermen Arrest Case

ABOUT THE AUTHOR

...view details