தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக முருகானந்தம், அவரது சகோதரர்கள் வீடுகளில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை! - ED RAID IN BJP AIADMK MEMBERS

புதுக்கோட்டையில் பாஜக நிர்வாகி முருகானந்தம் வீடு உள்பட கடுக்காகாடு மற்றும் ஆலங்குடி பகுதியில் உள்ள அவரது சகோதரர்கள் வீட்டுகளிலும் இன்று காலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமலாக்கத்துறை சோதனை
அமலாக்கத்துறை சோதனை (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2024, 4:53 PM IST

புதுக்கோட்டை:பாஜக புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பொருளாளரும், அரசு ஒப்பந்ததாரருமான முருகானந்தம் மற்றும் அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞர் அணி புதுக்கோட்டை மாவட்ட செயலாளரான முருகானந்தம் சகோதரர் பழனிவேலு என்பவருக்கு கடுக்காகாடு பகுதியில் உள்ள வீடு மற்றும் கறம்பக்குடியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக தற்போது பணிபுரிந்து வரும் முருகானந்தத்தின் மற்றொரு சகோதரரான ரவிச்சந்திரனின் ஆலங்குடி வீடு உள்ளிட்ட மூன்று வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ள பாஜக மேற்கு மாவட்ட பொருளாளர் அரசு ஒப்பந்ததாரருமான முருகானந்தம் வீட்டில் இரண்டு கார்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் வந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக நிர்வாகி முருகானந்தம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை (Credits- ETV Bharat Tamil Nadu)

முருகானந்தம் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டத்தில் முறைகேடு செய்துள்ளதாக கூறி ஏற்கனவே அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் மீண்டும் தற்போது சோதனை நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்யுங்கள்! பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

அதேபோல அதிமுகவில், எம்ஜிஆர் இளைஞர் அணி புதுக்கோட்டை மாவட்ட செயலாளரும், முருகானந்தம் சகோதரருமான பழனிவேலு என்பவரின் கடுக்காகாடு வீட்டிலும் நான்கு கார்களில் வந்த அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக போலீசாரிடமிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக நிர்வாகி முருகானந்தம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை (Credits- ETV Bharat Tamil Nadu)

இது குறித்து கூறிய போலீசார், “புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக தற்போது பணிபுரிந்து வரும் முருகானந்தத்தின் மற்றொரு சகோதரரான ரவிச்சந்திரனின் ஆலங்குடி வீடு உள்ளிட்ட மூன்று வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் மொத்தமாக 7 கார்களில் 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்” என்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details